உள்ளுராட்சி அதிகாரப் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக சாதாரண தொகையை விட அதிகமாக குடிநீர் தேவைகள் இருக்கின்ற போதும் அல்லது பிற விசேட நோக்கங்களுக்காக தண்ணீர் தேவைப்படும் போதும், பவுசர் மூலம் தேவையான அளவு தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாகக் கருதி நீரை வழங்குவதற்கும், கட்டணம் வசூலிப்பதற்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.
சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
செலுத்த வேண்டிய கட்டணம் நீர் பவுசர் கட்டணம்
நிலையான கட்டணமாகவும் போக்குவரத்து கட்டணம் கிலோ மீற்றரின் அடிப்படையிலும் அறவிடப்படும். உதாரணமாக நல்லூர் பிரதேசசபை ரூ.800 யை பவுசர் கட்டணமாக அறவிடகின்ற வேளை போக்குவரத்து கட்டணமாக கிலோமீற்றருக்கு ரூ.1000னை அறவிடுகின்றது.
உள்ளுராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர் சேவையை நிறைவு செய்வதற்கு
எடுக்ககூடிய குறைந்த கால எல்லை
ஒரு நாள்