விளையாட்டு மைதானங்கள்

உள்ளுராட்சி மன்றங்கள், தமது அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் நலனோம்பு மற்றும் சகல வசதிகளையும் பாதுகாத்து அவற்றை மேம்படுத்துவதற்கான செயற்பணிகள் கையளிக்கப்பட்டுள்ள அமைப்புக்களாகும். இந்த நலன்புரி செயற்பாடுகளின் ஒரு கட்டமாக மக்களின் உடற் சுகாதாரத்தைப் பாதுகாத்தல், இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தல் மற்றும் பொது கேளிக்கை செயற்பாடுகளுக்காக அப்பிரதேச உள்;ராட்சி மன்றங்களினால் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் அதேவேளை, விளையாட்டு மைதானத்தைப் பராமரித்தல், திருத்தங்கள் செய்தல் மற்றும் வசதிகளை மேம்படுத்துதல் போன்ற செலவுகளுக்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த விளையாட்டு மைதானங்களை விசேட நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை வாடகைக்கு பெற்றுக்கொடுக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்

செலுத்த வேண்டிய கட்டணம்

உள்ளுராட்சிமன்றங்களினால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் அரசினால் அவ்வப்போது விதிக்கப்படும் வரி மற்றும் மீளச் செலுத்தப்படும் கட்டணங்கள் போன்றவை குறித்த உள்ளுராட்சி மன்றங்களுக்கு செலுத்தப்படுதல் வேண்டும்.இயந்திரம் மற்றும் வாகனத்தின் வகை மற்றும் குறித்த சேவைக்காக வாகனம் பயனிக்க வேண்டிய தூரத்தின் அடிப்படையில் கட்டணம் தீர்மானிக்கப்படும்.

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்

உள்ளுராட்சி மன்றத்தின் முன் அலுவலக அதிகாரி

மைதானப் பொறுப்பாளர் சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை

ஒரு நாள்