உள்ளுராட்சி மன்றங்கள் தமது அதிகார எல்லையினுள் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான பொது நிர்வாக அதிகாரத்தைக் கொண்டதாகும். அதிகார எல்லையினுள் கழிப்பறைகளில் காணப்படும் மலக் கழிவுகளை அகற்றுவது இப் பணிகளின் ஒரு அம்சமாக அமைவதுடன் அது மக்களுக்குக்கான சுகாதார வசதியையும் மேம்படுத்தி உறுதிப்படுத்துகின்றது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.
செலுத்த வேண்டிய கட்டணம்
உள்ளுராட்சி மன்றங்களினால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும் கட்டணங்களும், அரசினால் அவ்வப்போது விதிக்கப்படும் வரிகளும், மீளச் செலுத்தப்படக் கூடிய பாதுகாப்பு வைப்புப் பணத்தையும் செலுத்துதல் வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் செயன்முறைக் கட்டணங்கள்
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்
உள்ளுராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்
விடய உத்தியோகத்தர்
தொழில்நுட்ப உத்தியோகத்தர்
சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை
1-2 நாட்கள்