2025ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மக்கள் கலந்துரையாடல் 10.10.2024

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களின் தெரிவு தொடர்பில் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி திட்டத்தினூடாக முன்னுரிமைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களில் மூலதன வேலைகள், திருத்த வேலைகள், விசேட வேலைத்திட்டங்கள் என்பவற்றில் உள்ளடக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான இறுதித்தீர்மானம் மேற்கொள்வதற்கான கலந்துரையாடலானது 10.10.2024 ஆம் திகதியன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
இக்கலந்துரையாடலில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், கமக்கார அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமைப்புக்கள் என்பவற்றுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மனம் எடுக்கப்பட்டது

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்ட நிகழ்வின்போது – 08.10.2024

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்ட நிகழ்வின்போது – 08.10.2024

எமது பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் பளை நகரத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக் கையின் போது